தூளியிலே ஆட வந்த பாடல் வரிகள்

Movie Name  Chinna Thambi
திரைப்பட பெயர் சின்ன தம்பி
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer Mano
Year 1991

ஆண் : ஓ ஹோ ….
ஓ ஹோ … ஓ ஹோ

ஆண் : தூளியிலே
ஆடவந்த வானத்து
மின்விளக்கே ஆழியிலே
கண்டெடுத்த அற்புத
ஆணிமுத்தே தொட்டில்
மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட

ஆண் : தூளியிலே
ஆடவந்த வானத்து
மின்விளக்கே ஆழியிலே
கண்டெடுத்த அற்புத
ஆணிமுத்தே

ஆண் : { பாட்டெடுத்து
நான் படிச்சா காட்டருவி
கண்ணுறங்கும் பட்டமரம்
பூமலரும் பாறையிலும்
நீர்சுரக்கும் } (2)

ஆண் : ராகமென்ன
தாளமென்ன அறிஞ்சா
நான் படிச்சேன் ஏழு கட்ட
எட்டுக் கட்ட தெரிஞ்சா
நான் படிச்சேன் நான் படிச்ச
ஞானமெல்லாம் யார் கொடுத்தா
சாமிதான் ஏடெடுத்துப் படிச்சதில்ல
சாட்சியிந்த பூமி தான்

ஆண் : தொட்டில் மேலே
முத்து மாலை வண்ண
பூவா விளையாட சின்னத்
தம்பி எசபாட

ஆண் : { சோறுபோடத்
தாயிருக்க பட்டினியப்
பார்த்ததில்ல தாயிருக்கும்
காரணத்தால் கோயிலுக்குப்
போனதில்ல } (2)
தாயடிச்சு வலிச்சதில்ல
இருந்தும் நான் அழுவேன்
நான் அழுதா தாங்கிடுமா
உடனே தாய் அழுவா

ஆண் : ஆகமொத்தம்
தாய் மனசு போல்
நடக்கும் பிள்ளை தான்
வாழுகிற வாழ்க்கையிலே
தோல்விகளே இல்லைதான்
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட

ஆண் : தூளியிலே
ஆடவந்த வானத்து
மின்விளக்கே ஆழியிலே
கண்டெடுத்த அற்புத
ஆணிமுத்தே தொட்டில்
மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட

Tags: Chinna Thambi, Chinna Thambi Songs Lyrics, Chinna Thambi Lyrics, Chinna Thambi Lyrics in Tamil, Chinna Thambi Tamil Lyrics, சின்ன தம்பி, சின்ன தம்பி பாடல் வரிகள், சின்ன தம்பி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *