உதயா உதயா உளறுகிறேன் பாடல் வரிகள்
Movie Name | Udhaya |
---|---|
திரைப்பட பெயர் | உதயா |
Music | A. R. Rahman |
Lyricist | Arivumathi |
Singer | Hariharan and Sadhana Sargam |
Year | 2004 |
பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்….ஆண் : ஆஅ…ஆஅ…
பெண் : காதல் தீண்டவே
காதல் தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்…
காதல்…காதல் காதல்…
ஆண் : உன் பாதி… வாழ்கிறேன்
என் பாதி… தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே
பெண் : என்னாளும்
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்…
காதல்…
ஆண் : காதல் காதல்
பெண் : என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்
ஆண் : உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
பெண் : ஏனோ ஏனேனோ
தொலைந்தேன் மீண்டேனோ
ஏனோ ஏனேனோ
மீண்டும் தொலைவேனோ
ஆண் : ஆயுள் ஆனவளே….
கூந்தல் இருட்டில் என்
கிழக்கு தொலைந்தும்
காதல்…தீண்டவே…
ஆண் : மூச்சின் குமிழ்களிலே
உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
பெண் : கூச்சம் வருகையிலே
உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஆண் : ஏனோ ஏனேனோ
ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ
நீயாய் ஆனேனோ
பெண் : தாயும் ஆனவனே
என் நெற்றி பாதையில்
ஊற்றை திறந்து
காதல்…
ஆண் : காதல்…தீண்டவே
காதல்…தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உன்னாலே தன்னாலே
ஆண் : உயிரே உயிரே உளறுகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்
பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…காதல்…
Tags: Udhaya, Udhaya Songs Lyrics, Udhaya Lyrics, Udhaya Lyrics in Tamil, Udhaya Tamil Lyrics, உதயா, உதயா பாடல் வரிகள், உதயா வரிகள் |
---|