வானில் இருள் சூழும்போது பாடல் வரிகள்
Movie | Nerkonda Paarvai | ||
---|---|---|---|
படம் | நேர்கொண்ட பார்வை | ||
Music | Yuvan Shankar Raja | ||
Lyrics | Umadevi | ||
Singers | Dhee (Dheekshitha) | ||
Year | 2019 |
வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே
வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு
விதிகள் தாண்டி கடலில் ஆடும்
இருள்கள் கீறி ஒளிகள் பாயும்
நான் அந்தக் கதிராகிறேன்
அகன்று ஓடும் நதிகளாகி
அருவி பாடும் கதைகளாகி
நான் இந்த நிலமாகிறேன்
பிழைகளின் கோலங்கள்
என் தோளில்தானே
சரிகளின் வரி
இங்கு யார்தான்
திறக்காதக் காடெல்லாம்
பூ பூக்காது பெண்னே
வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே
வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு
வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே