வசந்த மாலைநேரம் பாடல் வரிகள்
Movie | Mohini | ||
---|---|---|---|
படம் | மோகினி | ||
Music | S. M. Subbaiah Naidu, C. R. Subburaman |
||
Lyricist | Ambikapathi | ||
Singers | C. R. Subburaman, T. V. Rathinam |
||
Year | 1948 |
பெண் : ஆ……ஆஅ……ஆஅ……ஆ……ஆஆ…..ஆஅ…..
ஆஅ……ஆஅ…….ஆஅ……ஆஅ…..
பெண் : வசந்த மாலைநேரம்
வசந்த மாலை நேரம்
மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்
வசந்த மாலைநேரம்
வசந்த மாலை நேரம்
மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்
வசந்த மாலைநேரம்
வசந்த மாலை நேரம்
பெண் : மல்லிகை அல்லி முல்லை மலர
வரி வண்டு படியும் நேரம்…
ஆ…..ஆஅ……ஆ…..ஆ…..ஆ…..
மல்லிகை அல்லி முல்லை மலர
வரி வண்டு படியும் நேரம்…
பெண் : மல்லர்கள் உழுது எருதுடன்
தமது இல்லம் அணுகும் நேரம்
மல்லர்கள் உழுது எருதுடன்
தமது இல்லம் அணுகும் நேரம்
நல்ல மாலை நேரம்
என் காதலர் உள்ளம் தேடும் நேரம்
நல்ல மாலை நேரம்
என் காதலர் உள்ளம் தேடும் நேரம்…
ஆ…ஆ…அஹஹா
வசந்த மாலைநேரம்
ஆண் : இன்னும் வரக்காண்கிலேன் ஏனோ
என்னருமை மோகினி மானாள்
இன்னும் வரக்காண்கிலேன் ஏனோ
என்னருமை மோகினி மானாள்
மோகினி மோகினி மோகினி
ஆண் : வண்ணமயில் சாயல் கண்டேன்
மான் விழி தானும் கண்டேன்
வண்ணமயில் சாயல் கண்டேன்
மான் விழி தானும் கண்டேன்
அன்ன நடை கண்டேன்
அடங்கா மையல் கொண்டேன்
இன்னும் வரக்காண்கிலேன் ஏனோ
பெண் : காதல் வேகம் போல் இல்லையே
உனது கால்கள் தாவும் வேகம்……
ஆ…..ஆ….ஆ……ஆஆ…..ஆஅ……
காதல் வேகம் போல் இல்லையே
உனது கால்கள் தாவும் வேகம்……
பெண் : பேதை கொண்டுவரும் பாதை கண்டு
மெலிவாரே வீர விஜயன்
பேதை கொண்டுவரும் பாதை கண்டு
மெலிவாரே வீர விஜயன்
காட்டும் நடையிலும் திராட்டிலும்
அதிக ஓட்டம் விரைவுவேணும்
காட்டும் நடையிலும் திராட்டிலும்
அதிக ஓட்டம் விரைவுவேணும்
செல்லு செல்லு பரியே
செல்லு செல்லு பரியே……
ஆ…ஆ…ஆ…..ஆஆ….ஆஅ….
செல்லு செல்லு நீயே