வெள்ளாவி மனசுகாரனே பாடல் வரிகள்

Movie Thilagar
படம் திலகர்
Music Kannan
Lyricist Sarathy
Singers         Shankar Mahadevan,
Padayappa Sriram
Year 2023
ஆண் : ஊரே பேசுகின்ற
பூச குரு பூச
தேவமாரே நேசிப்பது
போச நம்ம போச
மூவர்க்கு மூவரே
தேவர்க்கு தேவரே
முக்குலத்தின் காவலரே
 
ஆண் : வெள்ளாவி மனசுகாரனே
வேல்கம்பு இனத்தானே
வெள்ளூரு சனத்துக்காரனே
வெள்ளந்தி குணத்தானே
 
ஆண் : நீ வேட்டி சட்ட போட்டு வரும்
பொட்டு வச்ச ஆகாயம்
நீ தொட்டு தந்த வாழ மரம்
எங்களுக்கு தாயாகும்
 
ஆண் : நீ கோபத்துல உக்கிரம்
ஆபத்துல சக்கரம்
வீதியில சந்தையில
ஒன்னையும் தான் கண்டா
படப்பு கட்டி நிக்கிறோம்
 
ஆண் : வெள்ளாவி மனசுகாரனே
வேல்கம்பு இனத்தானே
வெள்ளூரு சனத்துக்காரனே
வெள்ளந்தி குணத்தானே
 
ஆண் : எத்தனையோ பெருமைகள
வச்சிருக்கும் வம்சமடா
சாத்தியமா குலங்களிலே
எங்க குலம் அம்சமடா
 
ஆண் : காத்தபோல எங்களுக்கும்
இல்லையிங்க கடிவாளம்
ஆத்திரமும் அரவணைப்பும்
எங்களோட அடையாளம்
 
ஆண் : பட்ட சாராயம்
இனிக்கும் எங்க ஆம்பளைக்கு
ரெட்ட ஈரக்கொல
இருக்குமெங்க பொம்பளைக்கு
 
ஆண் : முக்குலம்னு சொன்னாலே
எக்குலமும் வரவேற்கும்
எங்க அக்குளிலே எப்போதும்
வீச்சருவா இருக்கும்
 
ஆண் : வெள்ளாவி மனசுகாரனே
வேல்கம்பு இனத்தானே
வெள்ளூரு சனத்துக்காரனே
வெள்ளந்தி குணத்தானே
 
பெண் : ஆதியில வந்தவுக
படையெடுத்து வந்தவுக
நீதி கேட்டு வந்தவுக
வரி நிதி கேட்டு வந்தவுக
 
பெண் : தங்கம் விக்க வந்தவுக
தவன காரா வந்தவுக
பூரா சனத்துக்கும்
பூந்தோட்டம் ஆன மண்ணு
யாரா இருந்தாலும்
காத்தோட்டம் தந்த மண்ணு
 
பெண் : ஆதி தமிழ் இனம்
அட ஆரம்பித்த பூமியிது
மீதி தமிழர் குடி
அட மீண்டிருக்கும் சீமையிது
அட்ரா மேளத்த
 
ஆண் : கொப்பறையில் பொன் அளந்து
மாப்பிள்ளைக்கு கொடுப்போண்டா
நூத்தியெட்டு ஆடறுத்து
பந்தியில குடிப்போண்டா
 
ஆண் : வீரமுள்ள தலமுறையா
வாழ்ந்திருக்கோம் வழி வழியா
மானம்காக்க ஒருதலையா
கண்டிருக்கும் கொல கொலையா
 
ஆண் : எங்களப் போல் மீச வச்சா
உங்களுக்கும் துடிப்பேறும்
எங்க சந்ததிங்க எல்லோர்க்கும்
பசும்பொன்னே பிடிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *