விண்ணில் விண்மீன் ஆயிரம் பாடல் வரிகள்
Movie | Kaappaan | ||
---|---|---|---|
படம் | காப்பான் | ||
Music | Harris Jayaraj | ||
Lyrics | Vairamuthu | ||
Singers | Nikitha Harris | ||
Year | 2019 |
விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
உடல் நிறம் மாறலாம்
உயிர் நிறம் ஒன்றுதான்
பேரன்பால் ஒன்றாய் சேரும்
தேசம் நன்றுதான்
தொழும் முறை மாறலாம்
இறை என்று ஒன்றுதான்
நம் ஈஸ்வர் அல்லா தேவன்
எல்லாம் ஒன்றுதான்
விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
ஒற்றை தேசம் என்றும்
ஒற்றை வாழ்க்கை என்றும்
யார் நினைத்தாலும் திணித்தாலும்
நிறைவேறுமா
பல வண்ணங்களால்
செய்த ஓவியம் போல்
ஒரு நிறம் கொண்ட படம் என்றும்
அழகாகுமா
வேற்றுமையில் அழகியல் உண்டு
வேற்றுமையில ஒற்றுமை நன்று
சகிப்பென்னும் பண்பாடு
படைத்த நிலம் இது
ஆஹ் விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று