விழி பேசும் மொழி இன்னும் பாடல் வரிகள்
Movie | Sila Nerangalil Sila Manidhargal |
||
---|---|---|---|
படம் | சில நேரங்களில் சில மனிதர்கள் |
||
Music | Radhan | ||
Lyricist | RJ Vijay | ||
Singers | Chinmayi Sripada, Haricharan |
||
Year | 2022 |
பெண் : விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ
தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ
நான் உன்னை சேரவே வானவில் கோலமோ
கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ
ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ
பெண் : …………………..
ஆண் : அழகே நீ இளைப்பாற
ஒரு மேகம் நான் பிடித்திடவா
தினமும் கதை பேச
நிலவை நான் வாங்கவா
நீ குளித்து தலை காய
புயல் காற்றை நான் அழைத்திடவா
நித்திரையில் உன்னை காக்க
சூரியனை தள்ளவா
பெண் : மௌனமாக நானும் பேச
உன் பதில் வருமா
வெட்கத்தில் உன் மார்பில் சாய
இடம் அது தருமா
கைகள் கோர்த்து காதல் செய்ய
வாழ்வின் வரமா
கனவில் வாழும் இந்த வாழ்க்கை
வாழ்ந்தால் சுகமா…ஆஅ….
பெண் : ஆ….ஆஅ….ஆ….
…………………………….
பெண் : களைப்பாக வரும் வேளை
உன்னை பார்க்க வாசல் வரவா
மகிழுந்தின் ஒலி கேட்க
நெற்றி பொட்டு சூடவா
நீ உறங்கும் என் மடியை
தலையணையாய் மாற்றிடவா
நள்ளிரவில் நீ சிணுங்க
தாலாட்டும் பாடவா
ஆண் : தாயை போல தாரம் நீயும்
தேவதை உறவா
சேர்ந்து வாழும் நாட்கள் எல்லாம்
காதலின் பதிவா
உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி
பூமியில் வருவா
தந்தாய் என்று என்னை சொல்லி
முத்தமும் தருவா…ஆஅ…
ஆண் : விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ
பெண் : தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ
ஆண் : நான் உன்னை சேரவே வானவில் கோலமோ
இருவர் : கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ
ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ….