ஒரு நாடிது என்றாலும் பாடல் வரிகள்
Movie | Maanaadu | ||
---|---|---|---|
படம் | மாநாடு | ||
Music | Yuvan Shankar Raja | ||
Lyricist | Arivu | ||
Singers | Yuvan Shankar Raja | ||
Year | 2021 |
ஆண் : ஒரு நாடிது என்றாலும்
பல நாடுகளின் கூடு
சிறுபான்மைகள் இல்லாமல்
பெரும்பான்மைகள் இங்கேது
ஆண் : நதி நீரது நில்லாது
அணையா தடை சொல்லாது
மத மேகங்கள் இங்கேது
பொதுவானது நம் நாடு
ஆண் : ஜனநாயகம் இல்லாது
நம் தாயகம் வெல்லாது
இரு நாணயத்தின் பக்கம்
அரணாக மொழி நிக்கும்
ஆண் : அட ஹிந்து முஸ்லிம் கிறிஸ்து
நம்ம பூர்வகுடி பர்ஸ்டு
அட வந்ததம்மா ட்விஸ்டு
நம்ம சந்ததிக்கே ஸ்ட்ரெஸ்
ஆண் : நீ வேறாய் நானும் வேறாய்… வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்… பேராய்
யாராரோ ஆண்டு கொள்ள… கொள்ள
வீராதி வீரம் சொல்ல… சொல்ல
ஆண் : ஆகாயம் ஏறும் காலம்… காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்… ஓரம்
ஏராளம் கோடி பேர்கள்… பேர்கள்
சேராமல் வாழும் கோலம்… கோலம்
ஆண் : மதமாய விட்டா தான்
சமுதாயம் முன்னேறும்
அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னாவோம்
சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே சண்ட வராது
ஆண் : கிழக்குல அடிச்சா
அது வலிக்கலையே வடக்குக்கு
சரித்திரம் படிச்சா
அதில் எடமில்லையே மதத்துக்கு
கடவுள படைச்சு
சட சடங்கைஎல்லாம் நடத்திட்டு
மனுஷன வெறுத்த
அது வரம் தருமா ஜனத்துக்கு
ஆண் : நீ வேறாய் நானும் வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்
யாராரோ ஆண்டு கொள்ள
வீராதி வீரம் சொல்ல
ஆண் : ஆகாயம் ஏறும் காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்
ஏறலாம் கோடி பேர்கள்
சேராமல் வாழும் கோலம்
ஆண் : மதமாய விட்டா தான்
சமுதாயம் முன்னேறும்
அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னவோம்
சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே சண்ட வராது