யார் வழியில் யார் மொழியில் பாடல் வரிகள்
Movie | Sila Nerangalil Sila Manidhargal |
||
---|---|---|---|
படம் | சில நேரங்களில் சில மனிதர்கள் |
||
Music | Radhan | ||
Lyricist | Snehan | ||
Singers | Dhanush | ||
Year | 2022 |
ஆண் : யார் வழியில் யார் மொழியில் யார் துணையில்
விடைகள் வந்து சேருமோ
யார் விதியில் யார் சதியில் யார் மதியில்
தடைகள் வந்து நேருமோ
ஆண் : தீர்வுகள் இன்றியே
பயணம் தான் நீளுமோ
தொடர்ந்திடும் துன்பத்தை
இதயம் தான் தாங்குமோ
எத்திசை எமக்கென
விடியல்தனை காட்டுமோ
எவ்வழி நம்பிக்கை
நம்மை வந்து சேருமோ
பெண் : எதுவும் கடந்து போகும்
என நினைத்தோம்
யாவும் பொய்தானோ
விதியே வென்று தீரும்
என படித்தோம் யாவும் மெய்தானோ
பெண் : யாரிடம் முறையிட
யாருமில்லை விடையை சொல்லிட
யாரோ தொடர்ந்த வழக்கு
விடியல்தனை தருமா நமக்கு
பாவம் நமது இலக்கு
நடை தளர்ந்து முடமாய் கிடக்கு
ஆண் : முன்வினை என்பது
பின்வினை தேடுமோ
ஒருவழி பாதையில்
வாழ்க்கைதான் ஓடுமோ
காரணம் யாரென்று
கடவுளை கேட்பதா
காலத்தை கேட்பதா
யார் இங்கு பேசுவார்
ஆண் : ஆகாயம் போலத்தான்
அடங்காத கேள்விகள்
விடைதேட தேடத்தான்
விரிசல்கள் நூறு
பலநேரம் வாழ்க்கைக்கு
பலியாகும் மானுடம்
பறிபோன யாவையும்
கிடைக்காது மீண்டும்
குழு : .………………………….
ஆண் : நாளைகள் என்பது
எதுவரையில் நீளுமோ
நம்பிக்கை கீற்றுகள்
அதுவரையில் வாழுமோ
சிலந்தியின் கூடென
சிந்தனைகள் யாவுமே
சிக்கல்களில் ஆடுதே
சிதறித்தான் போகுதே
ஆண் : எழுதாத நாடகம்
இயக்குவது யாரிங்கே
முடிவென்ன என்பதும்
யார் சொல்வாரோ
தெரியாத பாதையில்
புரியாத தேடல்கள்
எங்கெங்கோ போகுதே
விடை இங்கு இல்லையே
பெண் : எதுவும் கடந்து போகும்
என நினைத்தோம் யாவும் பொய்தானோ
விதியே வென்று தீரும்
என படித்தோம் யாவும் மெய்தானோ
பெண் : யாரிடம் முறையிட
யாருமில்லை விடையை சொல்லிட
யாரோ தொடர்ந்த வழக்கு
விடியல்தனை தருமா நமக்கு
பாவம் நமது இலக்கு
நடை தளர்ந்து முடமாய் கிடக்கு
பெண் : யார் வழியில் யார் மொழியில் யார் துணையில்
விடைகள் வந்து சேருமோ
யார் விதியில் யார் சதியில் யார் மதியில்
தடைகள் வந்து நேருமோ