ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் பாடல் வரிகள்
Movie | 100% Kadhal | ||
---|---|---|---|
படம் | 100% காதல் | ||
Music | G. V. Prakash Kumar | ||
Lyrics | Mohan Rajan | ||
Singers | G. V. Prakash Kumar | ||
Year | 2019 |
ஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல
தூரமாய்ப் போகவே நேர்ந்தது ஏனடி
கானலாய்த் தெரிகிற காதலி நானும்
உண்மையே என்று நம்பியே அருகிலே சென்றது வீணடி
ஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல
தூரமாய்ப் போகவே நேர்ந்தது ஏனடி
கானலாய்த் தெரிகிற காதலி நானும்
உண்மையே என்று நம்பியே அருகிலே சென்றது வீணடி
இருவிழிகள் போதவில்லை
அழுதிட கண்கள் கோடி எனக்கில்லையே
கண்ணுக்கு இமை இன்று தூரம்
நெஞ்சுக்கு நினைவின்று தூரம்
உடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே
கிளைமேலே இணை சேர்ந்த பூக்கள்
புயலே ஒன்றிங்கு மண்மேல்
வீழ்ந்தாலோ அதுமீண்டும் சேரக் கூடுமோ
உன்னோடு நான் வாழந்த நொடிகளெல்லாம்
கண்ணாடி அதுபோல உடைந்ததடி
ஒன்றாக நாம் சேர்த்த நினைவு எல்லாம்
ஒவ்வொன்றாய் என் முன்னால் தெரிந்ததடி
நினைத்ததெல்லாம் கிடைத்துவிட்டால்
வலிகளை மனம்தான் உணராதம்மா
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால்
விழிகளும் அழுதிடப் பழகாதம்மா
என் காதல் என் கோபம் தானா
உன் காதல் உன் மௌனம் தானா
தெரியாமல் இருக்கின்றோம் எனோ பாரடி…
ஒரு வார்த்தை நான் சொன்னால் போதும்
மறு வார்த்தை நீ சொன்னால் போதும்
எல்லாமே தலைகீழாய் மாறும் பேசடி…
ஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல
தூரமாய்ப் போகவே நேர்ந்தது ஏனடி
கானலாய்த் தெரிகிற காதலி நானும்
உண்மையே என்று நம்பியே அருகிலே சென்றது வீணடி
இருவிழிகள் போதவில்லை
அழுதிட கண்கள் கோடி எனக்கில்லையே
கண்ணுக்கு இமை இன்று தூரம்
நெஞ்சுக்கு நினைவின்று தூரம்
உடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே
கிளைமேலே இணை சேர்ந்த பூக்கள்
புயலே ஒன்றிங்கு மண்மேல்
வீழ்ந்தாலோ அதுமீண்டும் செராக் கூடுமோ