ஏனடி பெண்ணே பாடல் வரிகள்
Movie | Yenni Thuniga | ||
---|---|---|---|
படம் | எண்ணித்துணிக | ||
Music | Sam CS | ||
Lyricist | Sam CS | ||
Singers | Abhijith Rao | ||
Year | 2022 |
குழு : பா பா பாப்ப பா
பா பாப்ப பா
பா பா பாப்ப பா
பா பாப்ப பா
ஆண் : ஏனடி பெண்ணே
நான் இருப்பேனே
உனக்கா உனக்கா இருப்பேனே
ஏனடி பெண்ணே
நான் இருப்பேனே
உனக்கா உனக்கா இருப்பேனே
ஆண் : நீ பக்கம் வந்துட்டு பார்த்தாலே போதும்
நான் என்னாவேன் என்னாவேனோ
நீ கண்ணாலே ஏதாச்சும் பேசிட்டு போனா
நான் காணாம போய்டுவேனோ
ஆண் : உன் மூச்சோட காத்திங்க என் நெஞ்சில் பட்டா
நான் பஞ்சாக ஆய்டுவேனோ
நான் என்னாவேனோ ஏதாவேனோ
நீ இல்லாம நான் எப்டி வாழ்வேனோ
குழு : பா பா பாப்ப பா
பா பாப்ப பா
பா பா பாப்ப பா
பா பாப்ப பா
ஆண் : என்ன நீ மறுக்காம
என் கனவ கலைக்காம
உயிர உலுக்காம வா கூட
உனக்கு புரியாதா
நீ மட்டும் தா உலகம்னு
உன நான் எனதாக்க வழி கூறு
ஆண் : என் அழகே வா அழகே
இந்த ஜென்மத்துல நானும் வாழ
நீ போதும்டி மலரே
உயிரே என் உயிரே
உன் காதல் சொல்லி போயேன்
நீ தானே என் வாழ்க்க
குழு : பா பா பாப்ப பா
பா பாப்ப பா
பா பா பாப்ப பா
பா பாப்ப பா
ஆண் : மனசு வலிக்குன்னு
விட்டு விட்டு துடிக்குன்னு
எனக்கு தெரியாது
நீ இல்லாம
இறகா பறந்தேனே
உயரம் தெரியாம
உன் அன்பை உணர்ந்தேனே
வெகுவாக
ஆண் : ஒரு நதியா வந்து கலந்தேன்
என்ன மூழ்கடிச்ச ஆழியடி அச்சுவெல்ல அழகே
இது விதியா இல்ல மதியா உன் காதல் சொல்லி போயேன்
நீ தானே என் வாழ்க்க
குழு : பா பா பாப்ப பா
பா பாப்ப பா
பா பா பாப்ப பா
பா பாப்ப பா